ஆப்நகரம்

நடிப்புடன் புது அவதாரம் எடுத்த பிக்பாஸ் ஆரவ்!

பிக்பாஸ் ஆரவ், ஒரு படத்தில் நடிப்பதுடன் அந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளாராம்.

Samayam Tamil 29 Dec 2018, 4:28 pm
ஆரவ், பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது இவர் ‘ராஜபீமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நடிகை ஓவியாவும் நடிக்கிறார். மேலும் இவர் ஒரு குத்துப் பாடலுக்கு டான்ஸும் ஆடியுள்ளார்.
Samayam Tamil arav


இந்த நிலையில் ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஆரவ் தனது சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடி, பாடகர் என்ற புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு சைமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை நரேஷ் சம்பத் இயக்கி வருகிறார். படத்தை எஸ்.மோகன் தயாரிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்