ஆப்நகரம்

Balaji: திடீரென மதம் மாறிய நடிகர் தாடி பாலாஜி

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் நடிகர் தாடி பாலாஜி தன் தாய் மதத்துக்கு மாறியுள்ளார்.

Samayam Tamil 15 Feb 2019, 9:13 pm
பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் நடிகர் தாடி பாலாஜி தன் தாய் மதத்துக்கு மாறியுள்ளார்.
Samayam Tamil thadi-balaji


பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள பாலாஜி தற்போது பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராக உள்ளார்.

பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் கடந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களின் மகள் போஷிகா நித்யாவுடன் இருந்தார். இதனால் மன நிம்மதி இல்லாமல் பாலாஜி வேறு மதத்திற்கு மதம் மாறினார்.


இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட புரிதலில் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர் தன் தாய் மதமான இந்து மதத்திற்கே மீண்டும் பாலாஜி திரும்பியுள்ளார்.

பாலாஜி கூறும் போது, “தான் மதம் மாறிய பின்னர், தன்னுடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து அடிமை போல உணர்ந்தேன். அதனால் நான் மீண்டும் என் தாய் மதத்திற்கே மாறிவிட்டேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்