ஆப்நகரம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் படம் குறித்து ட்வீட் போட்ட தனுஷ்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராக்கி' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Samayam Tamil 7 Dec 2021, 4:25 pm
விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் 'ராக்கி'. கடந்த ஆண்டே இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Dhanush
Dhanush


ராமின் 'தரமணி' படத்திற்கு பிறகு அனைவராலும் அறியப்பட்ட நடிகர் வசந்த் ரவி 'ராக்கி' படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகினி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு இசையமைத்திருந்த தர்புகா சிவா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, சென்ற ஆண்டே 'ராக்கி' வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு படங்கள் பல ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அந்த வரிசையில் 'ராக்கி' படமும் வெளியாகாமல் முடங்கிப் போனது .

'மாநாடு' படத்தின் பிரம்மாண்ட வெற்றி: அடுத்த வேட்டைக்கு தயாரான சிம்பு!
ஆர் ஏ ஸ்டுடியோ தயாரித்திருந்த 'ராக்கி' படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்நிலையில் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், இது மிகச்சிறந்த படம். இந்தப்படத்தில் நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள். குறிப்பாக அன்பிற்குரிய பாரதிராஜா கலக்கியுள்ளார். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இவர் தற்போது தனுஷ் அண்ணன் செல்வராகவன் நடிப்பில் 'சாணிக் காயிதம்' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்