ஆப்நகரம்

Dhanush: இன்னும் தாமதமாகும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.

Samayam Tamil 2 Mar 2019, 1:34 am
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா படம்வெளியாவதில் மீண்டும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.
Samayam Tamil dhanush


தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா. இந்தப் படம் உருவாகி மூன்றாண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு கடந்த வாரம் தான் சென்சார் வந்தது.

2016ல் துவங்கப்பட்ட ‘எனைநோக்கி பாயும் தோட்டா படத்துக்கு இன்னும் வெளிவராமல் பெட்டிக்குள்ளே முடங்கிக் கிடக்கிறது. அந்த ஆண்டே வெளியாக வேண்டிய இந்தப் படம் தனுஷுக்கும், இயக்குனருக்கும் இடையே உள்ள பிரச்சினையால் தாமதமானது. தனக்கும் சம்பள பாக்கி இருந்ததால் மற்ற பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த தனுஷ் அடுத்து ’வேலை இல்லா பட்டதாரி-2’, ’ப.பாண்டி, ’வடசென்னை ஆகிய படங்களில் நடித்தார். அவர் நடித்த அனைத்து படங்களும் திரைக்கு வந்துவிட்டன.

தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் ‘அசுரன் படத்தில் முழுமூச்சாக நடித்து வருகிறார். தற்போது படத்தை வெளியிட படக்குழுவினர் தயாரான போது மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டு படம் மேலும் முடங்கி விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து விநியோகஸ்தர்கள் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு ’எனை நோக்கி பாயும் தோட்டா இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 28ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்