ஆப்நகரம்

மீண்டும் இணைந்த வெற்றிமாறன் - தனுஷ் காம்போ: விடுதலை அப்டேட்!

சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்று பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Oct 2021, 7:21 pm
வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் 'விடுதலை' படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Samayam Tamil Dhanush - Vetrimaaran
Dhanush - Vetrimaaran


'அசுரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் சூரியை ஹீரோவாக்கி 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

Suriya: சரவணனிலிருந்து சூர்யாவாக மாறியது இதனால்தான்.. மறுபேச்சே கிடையாது!
இந்நிலையில் இந்தப்படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். அதன்படி, இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடி உள்ளாராம். இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பிரத்யேக பயிற்சி பெற்று, நடிகர் தனுஷ் இப்பாடலை பாடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் தற்போது வெளியாகியுள்ள 'விடுதலை' படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து விரைவில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்