ஆப்நகரம்

ரஜினி பேன்ஸ்க்கு அது பிடிக்காது: எச்சரித்த தனுஷ்... கண்டுகொள்ளாத சாரா அலி கான்!

தலைவர் என்றால் ஒருவர் மட்டும்தான். அது ரஜினி சார் தான் என தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

Samayam Tamil 15 Dec 2021, 6:15 pm
'ஜகமே தந்திரம்' படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அதனை தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது.
Samayam Tamil Dhanush - Sara Ali Khan
Dhanush - Sara Ali Khan


இதனிடையில் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ’அத்ரங்கி ரே’ படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். இந்த்ப்படம் நேரடியாக படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸுக்கு முதல்நாள் வெளியாகிறது. இந்தப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில், என் அப்பாவுக்காக சமைத்துக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. அது ஆம்லெட்டோ அல்லது சப்பாத்தியோ. சமையல் என்பது மிகவும் அழகான மற்றும் தெய்வீகமான ஒரு கலை என்பது என் எண்ணம். அது நமது ஆன்மா மற்றும் ரத்தத்தோடு கலந்து விடும். ஆனால் என் அப்பாவுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. அவர் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்.

ஏழை மாணவியின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய பிரகாஷ் ராஜ்: குவியும் வாழ்த்துக்கள்!
சமையல் தவிர்த்து எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இளையாராஜாவின் இசை. இளையராஜா சார் என் கடவுள். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் தான் எனக்கு அம்மா, தாலாட்டு, எல்லாமே. நான் இயக்குநராகவே விரும்புகிறேன். ஒரு படம் எத்தனை விருதுகளை வென்றாலும் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் அதன் இயக்குநருக்கே கிடைக்கும். எனவே நான் ஒரு இயக்குநராக விரும்புகிறேன்.

சாரா அலி கான் என்னை தலைவா என்று அழைக்கிறார். தலைவர் ஒருவர் மட்டுமே. அது ரஜினி சார் தான். அப்படி கூப்பிட வேண்டாம் என்றும் ரஜினி ரசிகர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்றும் நான் சாராவிடம் லட்சம் முறை சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அதை கேட்பதில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் தனுஷ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்