ஆப்நகரம்

விவசாயிகளுக்காக நாம் கடன் பட்டுள்ளோம்: ஜிவி பிரகாஷ்

டெல்லியில் நாளை தொடங்க உள்ள நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஜிவி பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

TNN 19 Nov 2017, 4:59 pm
டெல்லியில் நாளை தொடங்க உள்ள நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஜிவி பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor gv prakash supports to farmers in delhi protest
விவசாயிகளுக்காக நாம் கடன் பட்டுள்ளோம்: ஜிவி பிரகாஷ்


இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், டெல்லியில் நாளை தொடங்கவுள்ள நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயி நம் உயிர் தேக்கி வைத்த நான்கெழுத்து கடவுள் எவர் அடி தொழுதேணும் அவர் துயர் துடைப்போம் #Indebted2Farmers — G.V.Prakash Kumar (@gvprakash) November 16, 2017 இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, முதலில் ‘Indebted2Farmers’, ‘KisanMuktiSansad’, ‘November 20th Dill Chalo’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். நாம் விவசாயிகளுக்கு கடன் பட்டுள்ளோம். அவர்களுக்கான பாராளுமன்றம் தேவை. நவம்பர் 20ம் தேதி டெல்லி செல்வோம் என்று பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, நம் நாட்டில் ஏழ்மையில் வாழும் பலகோடி விவசாயிகளுக்கு கடன்பட்டுள்ளோம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், விவசாயி நம் உயிர். தேக்கி வைத்த நான்கெழுத்து கடவுள். எவர் அடி தொழுதேணும் அவர் துயர் துடைப்போம் என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த 3 டுவீட்டுகளையும் ஏராளமானோர் லைக்ஸ் மற்றும் ஷேரும் செய்துள்ளனர்.

நம் நாட்டில் ஏழ்மையில் வாடும் பல கோடி விவசாயிகளுக்கு நாம் கடன் பட்டுள்ளோம்.#Indebted2Farmers #KisanMuktiSansad — G.V.Prakash Kumar (@gvprakash) November 16, 2017 விவசாயிகளுக்காக ஆதரவு தெரிவித்து வரும் பட்டியலில் கமல்ஹாசன், ரோகிணி, கிஷோர் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் இணைந்திருப்பது வரவேற்கத் தக்கது என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் ஆகியோர் உள்பட பல நட்சத்திர பட்டாளங்களும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘Indebted2Farmers’, ‘KisanMuktiSansad’, #KisanKiLoot என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. Share max friends #Indebted2Farmers #KisanMuktiSansad pic.twitter.com/Es5EZM3dey — G.V.Prakash Kumar (@gvprakash) November 16, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்