ஆப்நகரம்

சன்னி லியோனியுடன் மீண்டும் குத்தாட்டம் போடவுள்ள நடிகர் ஜெய்!

‘வடகறி’ படத்தை அடுத்து நடிகர் ஜெய், மீண்டும் சன்னி லியோனியுடன் குத்தாட்டம் போடவுள்ளார்.

Samayam Tamil 31 Dec 2018, 6:10 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் முதன் முறையாக மலையாள சினிமாவில் ‘ரங்கீலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய படம் உருவாக இருக்கிறது. அதேசமயம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மதுர ராஜா’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட இருக்கிறாராம் சன்னி லியோன்.
Samayam Tamil jai-sunny-leone


இந்தப் படத்தில் நடிகர் ஜெய்யும் நடிக்கிறார். தாதா கேரக்டரில் நடிக்கும் மம்முட்டி தம்பியாகவும், வலது கையாகவும் ஜெய் நடிக்கிறார். இந்த பாடலில் நடிகர் ஜெய், சன்னி லியோனுடன் இணைந்து ஆட உள்ளாராம். ஏற்கனவே தமிழில் ‘வடகறி’ என்ற படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஜெய் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்