ஆப்நகரம்

பூலோகம் பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் ஜெயம் ரவி: விரைவில் படப்பிடிப்பு!

பூலோகம் பட இயக்குனர் கிருஷ்ணன் கல்யாண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 Jul 2021, 6:49 pm
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக ஓடிடி வெளியாக ரிலீஸ் ஆனா பூமி திரைப்படம் தோல்வியை தழுவியது. அது மட்டுமல்லாமல் பலவித ட்ரோல் மீம்ஸ்களும் பலியானது பூமி திரைப்படம். இந்நிலையில் இரண்டாவது முறையாக கிருஷ்ணன் கல்யாண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி. இவர் கூட்டணியில் ஏற்கனவே பூலோகம் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Jayam_Ravi
Jayam_Ravi


இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன, மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துள்ளது. கல்கியின் பொன்னியன் செல்வன் நூலை தழுவி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் கார்த்திக், விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இதனிடையில் ஜன கன மன திரைப்படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாகப்பட வேண்டியுள்ளதால், கொரோனா கட்டுக்குள் வருவதற்காக காத்திருக்கின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு வெளியான பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன் கல்யாண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்கள் மீதான காதல்: ரேஸ் கார் பயிற்சியை நிறைவு செய்த நடிகை நிவேதா பெத்துராஜ்!
இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்ரியா நடிப்பில் ஏற்கனவே கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே ஆகியப் படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இது மட்டுமல்லாமல் இயக்குனர் ஹரியின் படம், ருத்ரன், இந்தியன் 2, பத்து தல உள்ளிட்ட படங்களிலும் நடிக்கவுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்