ஆப்நகரம்

ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு டிரெய்லர் ரிலீஸ் பண்றது யாரு தெரியுமா?

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாராள பிரபு படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 24 Feb 2020, 1:20 pm
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள தாராள பிரபு படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதை நடிகர் ஜெயம் ரவி வெளியிடவுள்ளார்.
Samayam Tamil dharala prabhu


நடிகர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக, தான்யா ஹோப் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் கருத்தரிப்பு மையம் நடத்துபவராக வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். தாராளபிரபு படம் இந்தி படமான விக்கி டோனர் படத்தின் ரீமேக் ஆகும். விக்கி டோனர் படத்தில் ஆயுஷ்மான் குரானா மற்றும் யாமி கவுதம் ஆகியோர் நடித்திருப்பார்கள்.


விக்கிடோனர் கதைப்படி, விந்து தானம் செய்யும் இளைஞராக ஆயுஷ்மான் நடித்திருப்பார். அதே கதாபாத்திரத்தில்தான் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். எனினும் அந்த படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்கு ஏற்றபடி கதையை கொஞ்சம் மாற்றி எடுத்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி இந்த படத்தின் டிரெய்லரை வெளியிடவுள்ளார். தாராள பிரபு படத்தின் டீசர் வெளியாகி பலரைக் கவர்ந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்