ஆப்நகரம்

மலையாளப் பட தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஜீவா!

நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடித்த மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 7 Apr 2018, 6:03 pm
நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடித்த மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார்.
Samayam Tamil jeeva


‘சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்’ என்ற மலையாள படத்தை இயக்குனர் டினு பாப்பச்சன் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர்.

நடிகர் ஜீவா நடித்த எந்த படமும் வெற்றிபெறவில்லை. இதனால் சரியான வெற்றிக்காக பல நாட்கள் காத்திருந்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். மலையாளத்தில் ஆண்டனி வர்கீஸ் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் அவர் கேரக்டரில் நடிகர் ஜீவா நடிககவுள்ளார்.

ஜெயிலிலிருந்து கூட்டாளிகளுடன் தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகச கதை தான் இது. இந்தப் படத்தை மலையாளத்தில் இயக்கிய இயக்குனர் டினு பாப்பச்சன் தான் தமிழிலும் இயக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்