ஆப்நகரம்

பார்வையற்றவராக வரும் கலையரசன்!

நடிகர் கலையரசன் ‘அதே கண்கள்’ படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார்.

Samayam Tamil 6 Nov 2016, 11:44 pm
நடிகர் கலையரசன் ‘அதே கண்கள்’ படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார்.
Samayam Tamil actor kalaiarasan act as blind
பார்வையற்றவராக வரும் கலையரசன்!


இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி அய்யர் நடித்து வரும் படம் ‘அதே கண்கள்’. இந்தப் படத்தில் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஷிவதா, பால சரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு ரவிவர்மன் நீலமேகமும், இசை ஜிப்ரான் அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

ரோஹின் வெங்கடேசன் ‘அதே கண்கள்’ பற்றி கூறுகையில், ‘‘இந்தப் படத்தில் காதலும் உண்டு, திகிலும், சஸ்பென்சும் நிறைந்த படம். மேலும் ஹீரோவுக்கு பார்வை கிடையாது. பார்வை இல்லாத வரை கலையரசன், ஜனனி, ஷிவதாவின் முக்கோண காதலாக நகரும் கதை. பார்வை வந்ததும் வித்தியாசமான திரைக்கதையாகவும் திரில்லராக மாறும் . இதில் பாலசரவணன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்