ஆப்நகரம்

நடிகர் கமல்ஹாசன் – பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு!

நடிகர் கமல்ஹாசன் – பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு!

TOI Contributor 11 Apr 2017, 12:51 am
டெல்லி : நடிகர் கமல்ஹாசன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு திடீரென தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.
Samayam Tamil actor kamal haasan met with pon radha krishnan
நடிகர் கமல்ஹாசன் – பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு!


பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணனின் அலுவலகத்திற்கு வந்த நடிகர் கமல்ஹாசனை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மரியாதை நிமித்தமாக கமல்ஹாசன் தன்னை சந்திக்க வந்ததாக பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் மரியாதை நிமித்தமாக என்னை புதுடெல்லியில் நடிகர் @ikamalhaasan அவர்கள் சந்தித்தார். pic.twitter.com/NvJSs9cnWV — Pon Radhakrishnan (@PonnaarrBJP) April 10, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்