ஆப்நகரம்

பரியேறும் பெருமாள் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!!

நடிகர் கமல்ஹாசன், பரியேறும் பெருமாள் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 3 Oct 2018, 7:07 pm
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பரியேறும் பெருமாள் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
Samayam Tamil பரியேறும் பெருமாள் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!!
பரியேறும் பெருமாள் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!!


பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள படம் தான் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இதனால் இப்படத்திற்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் கிடைத்துள்ளன.

அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பரியேரறும் பெருமாள் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்ஜித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், “மக்கள் மனமேறி அமர்ந்துவிட்டபரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும்தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்என் பாராட்டுக்கள். உங்களின் சிறப்பான பணி தொடரட்டும்,” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்