ஆப்நகரம்

'அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்': மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கமல் நெகிழ்ச்சி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.

Samayam Tamil 4 Dec 2021, 12:27 pm
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதனையடுத்து அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் கமல்ஹாசன்.
Samayam Tamil Kamal Haasan
Kamal Haasan


இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள கமல் இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், 'முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் கமல். அதில் மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கும் விக்ரம் படக்குழுவினருக்கும் என் நன்றிகள்.

29 Years Of Vijayism... திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி: கொண்டாடும் ரசிகர்கள்!
நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக்கடன்கள் செய்தும், அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.


பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பல்லவா என்னைக் கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்