ஆப்நகரம்

இன்று நடிகர் திலகத்தின் பிறந்தநாள்: வாழ்த்து கூறிய கமல்!

நடிகர் கமல்ஹாசன், நடிகர் திலகத்தின் பிறந்தநாளான இன்று அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Oct 2018, 5:30 pm
இன்று மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்தநாள். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
Samayam Tamil Sivaji-Ganesan-Thevar-Magan


நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று அவரது 91வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல் சிவாஜிகணேசன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று, அய்யா நடிகர் திலகத்தின் பிறந்த நாள். அவரின் எத்தனையோ தத்து பிள்ளைகளில் நானும் ஒருவனாய்... என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்“ என டுவிட் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்