ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் புகழ் பெறக்கூடாது: கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் புகழ் பெறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

TNN 19 Jan 2017, 12:41 pm
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் புகழ் பெறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor kamalhassan told film celebrities wont get fame in jallikattu issue
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் புகழ் பெறக்கூடாது: கமல்ஹாசன்


உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக, தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். அதற்கு பல்வேறு சினிமா நட்சத்திரங்களும், கட்சி தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் குரல் கொடுக்க வேண்டிய கடமையை மாணவர்கள் கையில் எடுத்துள்ளார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அது அவர்களின் குரலாகவே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டுவார்கள். ஆனால் தற்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஓட வைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று, அந்த ஒளியை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார். அது அவர்களுடைய போராட்டம் என்றும், நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். அறப்போட்டத்தில் ஈடுபடும் அவர்களை, தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Actor KamalHassan told film celebrities won't get fame in Jallikattu issue.

அடுத்த செய்தி

டிரெண்டிங்