ஆப்நகரம்

பருத்திவீரனாக வலம் வந்த கார்த்தியின் 42ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்!

பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கார்த்தி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Samayam Tamil 25 May 2019, 12:53 pm
பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கார்த்தி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Samayam Tamil Karthi


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. கலைக்குடும்பத்தில் பிறந்த இவர், ஆயுத எழுத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். எனினும், பருத்திவீரன் படம் மட்டுமே இவரை ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் ஆகிய படங்களில் வரிசையாக நடித்துள்ளார்.

இதில், சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களாகவே அமைந்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கைதி மற்றும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் புதிய படம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.



ஹீரோவான கார்த்தியின் உதவி இயக்குனர் என்ட்ரி

1. கடந்த 1977ம் ஆண்டு மே 25ம் தேதி பிறந்தார். இவரது தந்தை சிவகுமார். இவர் ஒரு நடிகர். சகோதரர் சூர்யா. இவரும் ஒரு நடிகர்.

2. சென்னையில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த இவர், அமெரிக்காவில் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் (இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங்) படித்துள்ளார்.

3. எம்.எஸ். முடித்த கார்த்தி, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஃபிலிம் மேக்கிங் படித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார்.

4. சென்னை வந்த கார்த்தி மாதம் ரூ.5000 வருமானத்தில் தொழில் துறைக்கான ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

5. சூர்யா நடிப்பில் வந்த ஆயுத எழுத்து படத்தில் இயக்குனர் மணிரத்னம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

6. ஆயுத எழுத்து படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இது தான் இவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7. உதவி இயக்குனராக இருந்த போது, பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததைத் தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

8. இவர், உமையாளின் மகள் ரஞ்சனி சின்னசாமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர், இலக்கியம் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.

9. தனது 31ஆவது பிறந்தநாளில் மக்கள் நல மன்றத்தைத் தொடங்கி பல உதவிகளை செய்து வருகிறார்.

10. தமிழில் வெளியான தோழா படம் தெலுங்கில் ஊப்பிரி என்ற டைட்டிலில் வெளியானது.







அடுத்த செய்தி

டிரெண்டிங்