ஆப்நகரம்

கொரோனா பிரச்சனை: நடுவிரலை காட்டி சீனா பற்றி கோபத்துடன் பேசிய நடிகர்

கொரோனா பரவ துவங்கிய சீனா பற்றி கோபத்துடன் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் கார்த்திக் குமார்.

Samayam Tamil 8 Apr 2020, 6:31 pm
சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 14 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil Karthik Kumar


இந்தியா உட்பட பல நாடுகள் கொரோனா பரவுவதை தடுக்க லாக் டவுன் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் ஏப்ரல் 14 வரை போடப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பரவ துவங்கிய சீனாவின் வுஹான் நகரம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளார்கள் என்கிற செய்தி வெளிவந்துள்ளது.

இது நல்ல விஷயம் தான். இந்நிலையில் இது பற்றி பிரபல நடிகர் கார்த்திக் குமார் சீனாவை பற்றி கூறிவிட்டு கோபத்துடன் நடுவிரலை காட்டி பேசியுள்ளார்.

தற்போது உலகத்தையே முடக்கியிருக்கும் இந்த வைரஸ் பரவ காரணமாக இருந்தது அவர்கள்தான் என்பதால் கோபத்துடன் பேசியுள்ளார் அவர்.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலில் வைரலாகி வருகிறது.

யாரடி நீ மோஹினி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் கார்த்திக் குமார். அவர் தற்போது ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அவரது நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும்.

அடுத்து கார்த்திக் இயக்குனராகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதல் படம் பற்றிய அறிவிப்பு சென்ற வருடமே வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்