ஆப்நகரம்

'லிஃப்ட்' பட டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்: உற்சாகத்தில் கவின் ரசிகர்கள்!

கவின், அம்ரிதா ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள 'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Samayam Tamil 24 Sep 2021, 6:24 pm
பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினின் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் 'லிஃப்ட்'. அறிமுக இயக்குனர் வினீத் இயக்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே நிறைவடைந்து விட்டது. இந்தப்படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Samayam Tamil Lift
Lift


கவின் நெல்சன் திலீப்குமாரின் படங்களில் ஏற்கனவே உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையில் 'லிஃப்ட்' படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா நடித்துள்ளார்.

சென்ற ஆண்டே திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய 'லிஃப்ட்' படம் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அதனை தொடர்ந்து இந்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லை.

டெல்லி விமான நிலையத்தில் தளபதி விஜய்: இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!
ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ட்விட்டர் பக்கத்தில் லிப்ட் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


'லிஃப்ட்' படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 'லிஃப்ட்' படத்தின் டிரெய்லரை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் கவின் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்