ஆப்நகரம்

அண்ணன் விஜய்க்காக விட்டுக் கொடுத்த நடிகர் கிருஷ்ணா!

தீபாவளிக்கு வரவேண்டிய ‘விழித்திரு’ படத்தை, அண்ணன் விஜய்யின் ‘மெர்சல்’ படத்துக்காக விட்டுக் கொடுத்தேன் என்று நடிகர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

TNN 14 Oct 2017, 2:01 pm
தீபாவளிக்கு வரவேண்டிய ‘விழித்திரு’ படத்தை, அண்ணன் விஜய்யின் ‘மெர்சல்’ படத்துக்காக விட்டுக் கொடுத்தேன் என்று நடிகர் கிருஷ்ணா கூறியுள்ளார்.
Samayam Tamil actor krishna get out from diwali race
அண்ணன் விஜய்க்காக விட்டுக் கொடுத்த நடிகர் கிருஷ்ணா!


அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. கேளிக்கை வரி குறித்த பிரச்சனையால் இரண்டு வாரமாக எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை. அக்டோபர் 7 வெளியாவதாக அறிவித்த கிருஷ்ணா நடித்த விழித்திரு மற்றும் சோலோ ஆகிய படங்கள் தள்ளிப்போனது.

தயாரிப்பாளர் சங்கம் எடுத்த நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்ட ‘விழித்திரு’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்திருக்கலாம் என்று ரசிகர் ஒருவர் கிருஷ்ணாவிடம் ட்விட்டரில் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நடிகர் கிருஷ்ணா “விஜய் அண்ணா ‘மெர்சல்’ தீபாவளி வேண்டும் என்பதால் இதை செய்து தான் ஆகவேண்டும்“ என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்