ஆப்நகரம்

அதிரடி ஆக்ஷனில் இறங்கும் கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணா அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்.

TNN 27 Feb 2017, 3:14 pm
இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியும், நடிகருமான கிருஷ்ணா, ‘யட்சன்’ படத்திற்கு பிறகு ‘யாக்கை’, ‘விழித்திரு’, ‘கிரகணம்’, ‘பண்டிகை’, ‘வீரா’, ‘களறி’ என பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு பெரும் பாலும் காதலை பிரதானமாக கொண்ட கதைகளிலேயே அதிகமாக நடித்து வந்துள்ள கிருஷ்ணா, புதிய படங்களில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறார்.
Samayam Tamil actor krishna will act in action movie
அதிரடி ஆக்ஷனில் இறங்கும் கிருஷ்ணா


இந்த படங்கள் திரைக்கு வரும்போது கிருஷ்ணாவை மாறுபட்ட நடிகராக காண்பீர்கள். அப்படி அவர் நடித்துள்ள படங்களில் நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது கணவர் பெரோஸ் இயக்கியுள்ள படம் ‘பண்டிகை’. தாதா சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் கிருஷ்ணா.

நிழல் உலக தாதாவுடன் மோதும் ஒரு சண்டை காட்சியில் மட்டும் ஒரு வாரத்திற்கு மேலாக நடித்திருக்கிறாராம். அதனால் கிருஷ்ணாவின் இந்த ‘பண்டிகை’ படம் ஆக்ஷன் பிரியர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்