ஆப்நகரம்

'வாலி' படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா எழுதிய மாஸ் சீன்: இதை போய் வைக்காம விட்டுட்டாரே..!

சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்து எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வாலி' படம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 22 Feb 2023, 9:13 am
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் எஸ்.ஜே. சூர்யா. தற்போது விஷாலுடன் 'மார்க் ஆண்டனி' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் 'வாலி'. இந்தப்படம் குறித்து நடிகர் மாரிமுத்து, சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Vaalee
Vaalee


கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் 'வாலி'. அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப்படத்தில் சிம்ரன் கதாநாயாகியாக நடித்திருந்தார். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் அஜித்தின் நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இன்று வரையிலும் ரசிகர்களின் பேவரைட் கேரக்டராக அஜித்தின் 'வாலி' நெகட்டிவ் கதாபாத்திரம் உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'வாலி' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத அண்ணன் தேவாவாகவும், அவர் மீது உயிரையே வைத்திருக்கும் தம்பி சிவாவாக மற்றொரு கதாபாத்திரத்திலும் அஜித் நடித்திருந்தார். இதில் தம்பியின் மனைவி பிரியாவாக வரும் சிம்ரனை அடைய நினைக்கும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்போது அஜித் மங்காத்தா, துணிவு என வில்லன் கேரக்டர்களில் மாஸ் காட்டி வந்தாலும் 'வாலி' படத்தில் வரும் தேவா கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாதது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து பிரபல நடிகர் மாரிமுத்து, சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். 'வாலி' படத்தில் அண்ணன், தம்பி ஒரே மாதிரியாக இருப்பதால் தனது கணவர் யார் என்பதில் சிம்ரன் சிலசமயம் குழப்பமடைவார்.

Prabhu: நடிகர் பிரபு மருத்துவமனையில் திடீர் அனுமதி: வெளியான அறிக்கை..!

இந்த பிரச்சனையை சரிசெய்ய ஒரு காட்சியில் தம்பி சிவா மீசையை எடுத்துவிட்டு வந்து உனக்காகவே இதை செய்தேன் என மனைவியிடம் கூறி, அண்ணனிடம் காண்பிக்க செல்லும் போது அவரும் மீசையை எடுத்திருப்பார். இந்தக்காட்சியை படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா எழுதியிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் அஜித் வேறொரு படத்திலும் நடித்து கொண்டு இருந்தால் அவரால் மீசையை எடுக்க முடியவில்லை.

Dada, Kavin: நான் தனுஷ் பேசுறேன்.. திடீரென வந்த போன் கால்: நெகிழ்ந்து போன கவின்..!

இதனால் இந்த காட்சி 'வாலி' படத்தில் வைக்க முடியாமல் போயுள்ளது. இதனை மாரிமுத்து பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இப்படிப்பட்ட சீனை வைக்காம போயிருக்கீங்களே தலைவரே. இந்த சீனை வைச்சிருந்த வேறலெவல்ல இருந்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும்,எஸ்.ஜே. சூர்யாவை சீக்கிரமே படம் இயக்க சொல்லியும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்