ஆப்நகரம்

கலெக்ஷன் பற்றி ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் : நானி கோபம்

'ஜெர்ஸி' படத்தின் வசூல் பற்றி பத்திரிகையாளர் கேட்டபோது நானி கோபமாக பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 16 Sep 2019, 6:51 pm
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் 'மனம்' படப்புகழ் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் 'கேங் லீடர்'. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படத்தின் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒருவர் 'ஜெர்ஸி' படத்தின் வசூல் பற்றிக் கேட்க கோபமானார் நானி.
Samayam Tamil actor nani angry on the question about jersey movie box office collection
கலெக்ஷன் பற்றி ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் : நானி கோபம்


கடந்த ஏப்ரல் மாதம் கவுதம் தின்னூரி இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 'ஜெர்ஸி'. கிரிக்கெட் வீரன் ஒருவன் திருமணத்திற்குப் பின் மகன் பிறந்து வளர்ந்த பிறகு, மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, இந்திய அணிக்கு தேர்வாகி கிரிக்கெட் விளையாடுவதுவதை மையமாக கொண்ட கதைதான் 'ஜெர்ஸி'.

இப்படம் தெலுங்கு மசாலா பட பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான நடிப்பை வழங்கியிருந்தார் நானி. தெலுங்கு ரசிகர்களை தாண்டி பலரையும் இந்தப் படம் கவர்ந்தாலும், தெலுங்கு மசாலாப் படங்கள் அளவு இந்தப் படத்தின் வசூல் இல்லை என பலர் கூறி வந்தனர்.

இந்த நிலையில் கேங் லீடர் பட பத்திரிகையாளர் சந்திப்பில் நானியிடம் ஜெர்ஸி படத்தின் வசூல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

ஏன் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள், இதைப் புரிந்து கொள்ள எனக்கு கடினமாக இருக்கிறது. இதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். அப்படத்தின் கலெக்ஷன் 30 கோடி ரூபாய்.
ஜெர்ஸி படத்தின் பட்ஜெட்டுக்கு அதை விட அதிகமாகவே அப்படம் சம்பாதித்துள்ளது. அதைவிட விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமாவின் வழக்கமான பாணியை உடைத்து, இம்மாதிரி படங்கள் வரவேற்பு பெறும் என்பதை நிரூபித்துள்ளது. பல மொழிகளிலும் அப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. அனைத்து விஷயங்களிலும் ஜெர்ஸி ஒரு பிளாக் பஸ்டர் எனக் காட்டமாக கூறியுள்ளார்.

'ஜெர்ஸி' படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நானி கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க இருக்கின்றனர். 'மான்ஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்