ஆப்நகரம்

அதே கம்பீரத்துடன் வருவேன்... நம்பிக்கையோடு விஜயகாந்த்!

மீண்டும் பழைய கம்பீரத்துடன் வருவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Aug 2018, 6:15 pm
சென்னை: மீண்டும் பழைய கம்பீரத்துடன் வருவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 2


தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நடிகர் பார்த்திபன் சென்றுள்ளார். அப்போது அவரிடம் என்னை பழைய மிரட்டலுடன் காண்பீர்கள் என விஜயகாந்த் கூறியுள்ளார். விஜயகாந்த்கடந்த 25ம் தேதி தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார்.

விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விஜயகாந்துக்கு நடிகர் பார்த்திபன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என நம்பிக்கை அளித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்