ஆப்நகரம்

தேவசேனாவுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த பாகுபலி!

‘பாகுபலி’ ஜோடிகள் பிரபாஸும், அனுஷ்காவும் தங்களின் பிறந்தநாளுக்கு ஒருவருக்கொருவர் பரிசளித்து தங்களின் பிறந்தநாளுக்கு பரிசளித்து தங்களின் காதலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

TNN 14 Nov 2017, 2:04 pm
‘பாகுபலி’ ஜோடிகள் பிரபாஸும், அனுஷ்காவும் தங்களின் பிறந்தநாளுக்கு ஒருவருக்கொருவர் பரிசளித்து தங்களின் பிறந்தநாளுக்கு பரிசளித்து தங்களின் காதலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Samayam Tamil actor prabhas bmw car prized to actress anushka
தேவசேனாவுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த பாகுபலி!


நவம்பர் 7ஆம் தேதி நடிகை அனுஷ்கா தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர் பிரபாஸ், அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு காஸ்ட்லி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். மேலும் அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களோ நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறி வரும் நிலையில், அனுஷ்காவின் 36வது பிறந்தநாளில் அவருக்கு பிரபாஸ் விலை உயர்ந்த பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரபாஸ் பிறந்தநாளைக்கு விலை உயர்ந்த டிசைனர் கைக்கடிகாரத்தை, அனுஷ்கா பரிசாக அளித்தார். பிரபாஸ் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்