ஆப்நகரம்

இனியும் கந்து வட்டிக் கொடுமை தொடரக்கூடாது: பிரகாஷ் ராஜ்!

கந்து வட்டி கொடுமையால் ஏராளமான திரையுலகினர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

TNN 22 Nov 2017, 3:39 pm
கந்து வட்டி கொடுமையால் ஏராளமான திரையுலகினர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor prakash raj says about sasikumars relation suicide
இனியும் கந்து வட்டிக் கொடுமை தொடரக்கூடாது: பிரகாஷ் ராஜ்!


தமிழ்நாட்டில் சமீபகாலமாக கந்துவட்டி கொடுமையால் ஏற்படும் தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலியில் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் கந்து வட்டியின் கொடுமைகளை நாட்டிற்கு உணர்த்தியது. தற்போது தமிழ்த் திரையுலகில் முக்கிய இடத்தில் இருக்கும் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் திரையுலகத்தில் அவரைப் போலவே இன்னும் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு வாங்கித்தான் படமெடுக்கிறார்கள். அப்படி வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் அவர்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் அவர்களால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாது. அந்தக் குறிப்பிட்ட பைனான்சியர் கைவசம் தான் திரையுலகின் முக்கியமான பல சங்கங்கள் உள்ளதாக திரையுலகில் தெரிவிக்கிறார்கள். அவர் என்ன சொல்கிறாரோ அதைத் தான் சங்கத்தில் உள்ளவர்களும் செய்வார்கள் என்றும் சொல்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் கூட அவரிடம் பைனான்ஸ் பெற்றுத்தான் படத்தைத் தயாரித்து வருகிறார் என்கிறார்கள். இந்த நிலையில், சசிகுமாரின் உறவினரான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், கந்து வட்டியால் தமிழ் திரையுலகினர் ஏராளமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். இனியும் கந்து வட்டி கொடுமை தொடரக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளைப் போன்று தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர்களும், நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். திரையுலகில் பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் தான் இருக்கின்றனர் என்று கூறியுள்ளனர். மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது பற்றி எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்