ஆப்நகரம்

பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான சுதர்சன் காலமானார்!

பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான சுதர்சன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

TNN 8 Sep 2017, 2:54 pm
பெங்களூரு: பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான சுதர்சன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
Samayam Tamil actor producer sudarshan passes away
பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான சுதர்சன் காலமானார்!


கர்நாடகாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் சுதர்சன்(78). இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர்.

இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் காலமானார்.

அவர் கடைசியாக ’Zoom’ என்ற கன்னட படத்தில் நடித்தார். இவர் அக்னி சாக்‌ஷி, மரகத வீணை, மாயா மச்சிந்திரா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மேலும் சிறந்த பாடகராகவும் இருந்துள்ளார். தமிழில் பாயும் புலி, புன்னகை மன்னன், வேலைக்காரன், நாயகன், பாரிஜாதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actor, producer Sudarshan passes away.

அடுத்த செய்தி

டிரெண்டிங்