ஆப்நகரம்

கேரள மாணவனை பாராட்டிய நடிகர் மாதவன்!

10ம் வகுப்பு படிக்கும் கேரள மாணவனை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.

TNN & Agencies 26 Aug 2017, 7:57 pm
10ம் வகுப்பு படிக்கும் கேரள மாணவனை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.
Samayam Tamil actor r madhavan praise to kerala student
கேரள மாணவனை பாராட்டிய நடிகர் மாதவன்!


இன்றைக்கு யூடியூப்பில் கிரியேட்டிவான நிறைய வீடியோக்கள் வலம் வருகின்றன. திருவனந்தபுரத்தை சேர்ந்த அமன் எஸ்.டொமினிக் என்கிற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் டிரைலரை தனது கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி ரீமிக்ஸ் செய்து அதை தனது டுவிட்டர் பக்கம் மூலமாக அந்தப் படத்தில் நடித்த நடிகர் மாதவனுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை ஏதேச்சையாக பார்த்த மாதவன், அந்த சிறுவனின் கிரியேட்டிவிட்டியை பாராட்டியுள்ளார். இதுபற்றி சந்தோஷத்தில் திளைக்கும் அந்த மாணவன் அமன், இதுபோன்ற புதிய விஷயங்களில் ஈடுபட மாதவனின் பாராட்டு ஊக்கம் தருவதாக இருக்கிறது என கூறியுள்ளார். https://t.co/CcmULZcvzo@ActorMadhavan as Batman and @i_vijaysethu as Joker in dis VV trailer remix... — Madhavan Narayanan (@i_maddy15) August 13, 2017
இந்த சிறுவன் தனது 12 வயது முதலேயே எடிட்டிங்கில் தூள் கிளப்பி வருகிறார். இவரின் திறமையை பார்த்து ஆச்சர்யப்பட்ட அவரது தந்தை அவனுக்கென ஒரு எடிட்டிங் ஸ்டூடியோவே வைத்து கொடுத்துள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்