ஆப்நகரம்

'வெளிவராத கதாபாத்திரங்கள்' - மாதவன் வெளியிட்ட புகைப்படங்களால் பரபரப்பு!

நடிகர் மாதவன் தான் நடித்து ஆனால் வெளியவராமல் போன படங்களில் இடம்பெற்ற தனது கதாபாத்திரத்தின் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருக்கிறார்.

Samayam Tamil 23 Dec 2020, 9:20 am
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று', 'விக்ரம் வேதா' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. சமீபத்தில் அவர் நடித்த சைலன்ஸ் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. தற்போது 'மாறா' படத்தில் ஷ்ரதா கபூருடன் அவர் இணைந்து நடித்திருக்கிறார். இப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ், இந்தியில் அவர் நடிக்கும் படங்கள் உள்ளன. எனினும் இதற்கு முன்னர் அவர் நடித்த பல்வேறு படங்களின் வெளியிடப்படாத கதாபாத்திரங்களின் புகைப்படங்களை மாதவன் வெளியிட்டு வருகிறார்.
Samayam Tamil Madhavan


மன்னர் சத்ரபதி சிவாஜி, வித்தியாசமான வில்லன் உட்பட பல்வேறு புகைப்படங்களை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். "நான் நடித்து, ஆனால் முழுமையடையாமல் வெளியேறிய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் இவை. இதற்கு முன் நான் நடித்திடாத வேடங்கள் இது.

இவற்றில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறது..." என்று புகைப்படங்களோடு மாதவன் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

'மாலிக்' வேடத்தில் உருமாறிய ஃபகத் பாசில்!

மாதவன் பக்கத்தை பின்தொடரும் 2.7 மில்லியன் மக்களில் பலரும் இந்த புகைப்படங்களை வெளியிட்டதற்காக வாழ்த்து கூறி உள்ளனர். இதுபோன்ற சிறந்த கதாபாத்திரங்களில் நீங்கள் திரையில் தோன்றவில்லை என பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இனி வரும் நாட்களில் சிறிய பாத்திரங்களைவிட முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் அதிகம் நடிப்பேன். இடையில் கைவிடப்படாமல் தனது படங்கள் தொடர்ச்சியாக வெளியாகுமென மாதவன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்