ஆப்நகரம்

6 மாதத்தில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய ராதாரவி

நடிகர் ராதா ரவி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

Samayam Tamil 30 Nov 2019, 2:12 pm
நடிகர் ராதா ரவி அதிமுகவில் சேர்ந்த 6 மாதத்தில் அதில் இருந்து விலகி இன்று பாஜகவில் சேர்ந்துள்ளார். தேசிய கட்சியில் சேர்ந்துள்ள ராதாரவிக்கு நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
Samayam Tamil radha ravi


அவரின் ட்வீட்டை பார்த்தவர்கள், ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம், நாளையே அவர் வேறு கட்சிக்கு தாவலாம் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்கள். அதே சமயம், பாஜகவினரோ ராதாரவியை வரவேற்றுள்ளதுடன் அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ராதாரவி என்றாலே அடிக்கடி கட்சியை மாற்றுவார் என்று பெயர் எடுத்துவிட்டார். அவர் முதன்முதலாக திமுகவில் சேர்ந்தார். அதன் பிறகு அங்கிருந்து மதிமுகவுக்கு சென்றார். மதிமுகவில் கொஞ்ச காலம் இருந்த அவர் மீண்டும் திமுகவுக்கே திரும்பினார்.

சாலை விபத்தில் பலியான ரசிகர்: உடலை பார்த்து அழுத கார்த்தி

பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். 2002ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு ராதாரவி அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு சென்றார்.

இதுக்கு போய் பெரிய கம்பெனி படத்தில் நடிக்க மறுத்தாராம் சூர்யா!

இந்நிலையில் நயன்தாரா பற்றி நிகழ்ச்சி ஒன்றில் தரக்குறைவாக பேசியதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் சேர்ந்தார். அங்கு சேர்ந்த 6 மாதத்தில் பாஜகவுக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்