ஆப்நகரம்

’காலா’வை மிஞ்சிய ’கால பைரவா’; ராகவா லாரன்சின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

நடிகர் லாரன்சின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNN 18 Jan 2018, 6:37 pm
சென்னை: நடிகர் லாரன்சின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil actor raghava lawrence next movie named kaala bairava
’காலா’வை மிஞ்சிய ’கால பைரவா’; ராகவா லாரன்சின் அடுத்த அதிரடி அறிவிப்பு!


நடன இயக்குநராக இருந்து நடிகராக வளர்ந்தவர் ராகவா லாரன்ஸ். இவரது முனி, காஞ்சனா படங்கள் பெரும் வெற்றி பெற்று, வசூலை வாரி குவித்தது.

இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்தார். தற்போது காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிக பிரம்மாண்டமாக ‘கால பைரவா’ என்ற பெயரில் உருவாகிறது.

இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள லாரன்ஸ், ரசிகர்களின் வாழ்த்துக்களையும், ஆதரவையும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Actor Raghava Lawrence next movie named Kaala Bairava.

அடுத்த செய்தி

டிரெண்டிங்