ஆப்நகரம்

ரோகிணியின் மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நர்ஸ் வேடத்தில் நடித்த ‘ரெமோ’ திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா ஜோடி சேரவுள்ளார்.

TNN 7 Nov 2016, 7:11 am

Samayam Tamil actor rahini act as mother for sivakarthikeyan next movie
ரோகிணியின் மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்

இப்படத்தை தயாரிக்கும் 24AM ஸ்டூடியோ சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாஅக பிரபல நடிகை ரோகினி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இப்படத்தி படப்பிடிப்பு நவம்பர் 11ல் தொடங்கும் என்றும், ரோகினி 14ம் தேதி படப்பிடிப்பிற்கு கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளது.

இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலு இதில் சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா,சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்