ஆப்நகரம்

'பொன்னியின் செல்வன்' சரித்திரப் படத்தில் நீயும் இருப்பது மகிழ்ச்சி: ரகுமான் நெகிழ்ச்சி பதிவு!

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு இடைவெளியில் பாபு ஆண்டனி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரகுமான்.

Samayam Tamil 1 Sep 2021, 2:34 pm
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Rahman
Rahman


விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அடுத்தக்கட்ட படப்பிடிபிற்காக மகேஷ்வர் நகருக்குச் சென்றுள்ளனர் படக்குழுவினர்.

'எதற்கும் துணிந்தவன்' 51 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்கு பாண்டிராஜ் நன்றி!
இந்நிலையில் நடிகர் ரகுமான் தனது பழைய நண்பர் நடிகர் பாபு ஆண்டனி உடன் ஒன்றாக நேரம் செலவிட்ட தருணம் குறித்து நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ரகுமான், பாபு ஆண்டனி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'ஒரு நல்ல பயணம். என் நெருங்கிய நண்பா, மீண்டும் ஒன்றாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. பழைய நினைவுகளை மீண்டும் உற்சாகத்துடன் நினைக்க முடிந்தது. இந்த சரித்திரப் படத்தில் நீயும் இருப்பது மகிழ்ச்சி. உனது வருங்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்