ஆப்நகரம்

சினிமாவில் அறிமுகம் செய்ய மகளுக்கு பயிற்சி கொடுத்த டாக்டர் ராஜசேகர்!

டாக்டர் ராஜசேகர் தன் மகள் ஷிவானியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக நடிப்பு பயிற்சியைக் கற்றுக் கொடுத்துள்ளார்.

TNN 1 Jun 2017, 5:26 pm
டாக்டர் ராஜசேகர் தன் மகள் ஷிவானியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக நடிப்பு பயிற்சியைக் கற்றுக் கொடுத்துள்ளார்.
Samayam Tamil actor raja sekhar gives training for his daughter to acting in cinema
சினிமாவில் அறிமுகம் செய்ய மகளுக்கு பயிற்சி கொடுத்த டாக்டர் ராஜசேகர்!


நடிகர் ராஜசேகர் 1984ல் ‘புதுமைப்பெண்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘புதிய தீர்ப்பு’, ‘இதுதான்டா போலீஸ்’, ‘மீசைக்காரன்’ என தமிழில் பல படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி ஹீரோவானார். அதோடு நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம்செய்து கொண்டார்.

டாக்டர் ராஜசேகர் & - ஜீவிதா நட்சத்திர தம்பதிக்கு ஷிவானி, ஷிவத்மிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், இவர்களில் மூத்த மகள் ஷிவானி தற்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டார். அவரை சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார் டாக்டர் ராஜசேகர்.

கல்லூரியில் படித்து வந்தபோதே ஷிவானிக்கு நடிப்பு பயிற்சியும் கொடுத்து வந்துள்ள நிலையில், அவரை ஹீரோயினாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று தற்போது சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார் டாக்டர் ராஜசேகர். விரைவில் மகள் ஷிவானி நடிக்கும் படத்தை விரைவில் அறிவிக்கவுள்ளார் டாக்டர் ராஜசேகர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்