ஆப்நகரம்

நானே தல ரசிகன்தான்: தலைவர் ரஜினியின் அதிரடி!

நடிகர் ரஜினிகாந்த் தற்போதைய இந்திய அணியில் தோணிதான் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார்

Samayam Tamil 6 Jan 2018, 7:05 pm
நடிகர் ரஜினிகாந்த் தற்போதைய இந்திய அணியில் தோணிதான் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor rajinikanth says that ms dhoni is his favorite cricketer
நானே தல ரசிகன்தான்: தலைவர் ரஜினியின் அதிரடி!


நடிகர் ரஜினி கட்சி அறிவிப்பிற்கு பின், நடிகர் சங்க விழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ளார். நடிகர் கமல் மற்றும் ரஜினி தங்கள் அரசியல் பிரவேசத்திற்கு பின் பங்கேற்கும் நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கி வைத்த ரஜினியிடம், அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யாரென்று கேட்கப்பட்டது. அதற்கு, நடிகர் ரஜினி தனக்கு எப்போதும் பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் என்றும், தற்போதைய அணியில் தோணிதான் தனக்குப் பிடித்த வீரர் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்