ஆப்நகரம்

செளந்தர்யாவா, மத்திய அரசா, ஜல்லிக்கட்டா? - ரஜினி மெளனம்

ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து ரஜினி தொடர்ந்து மெளனம் காத்து வருகிறார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்து வருகின்றது.

TNN 13 Jan 2017, 7:09 pm
ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து ரஜினி தொடர்ந்து மெளனம் காத்து வருகிறார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்து வருகின்றது.
Samayam Tamil actor rajinikanth silent about jallikattu
செளந்தர்யாவா, மத்திய அரசா, ஜல்லிக்கட்டா? - ரஜினி மெளனம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கமல், சிம்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என தமிழ் ரசிகர்கள் ரஜினியை கொண்டாடி வருகின்றனர். ஆனால் ரஜினியோ இதுவரை தமிழகம் தொடர்பான எந்த பிரச்னையிலும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்.

கருப்பு பணத்தை ஒழிப்பு நடவடிக்கையாக 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து உடனே மோடியை பாராட்டி ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு முன் காவிரி பிரச்னை அதிகமாக இருந்த நேரத்தில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பலமான போராட்டம் நடைப்பெற்று வருகின்றது. இதற்கும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்து வருகின்றார்.



இதற்கு காரணம், ரஜினியின் மகள் செளந்தர்யா விலங்குகள் நல வாரிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளது தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

செளந்தர்யா ரஜினிகாந்தும் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக இருப்பதால் தான், ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து ரஜினி எந்த கருத்தும் வெளியிடாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முரட்டுக்காளை படத்தில் காளையை அடக்குவது போல நடித்து புகழ் பெற்ற ரஜினிகாந்த், தற்போது ஜல்லிக்கட்டு தொடர்ப்பாக கருத்து தெரிவிக்காமல் உள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு மட்டுமில்லாமல், காவிரி நதி நீர் விவகாரத்திலும் ரஜினி மெளனம் காப்பது தமிழ் திரைப்பட ரசிகர்களை அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்