ஆப்நகரம்

சாகித்ய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளரை பாராட்டிய நடிகர் ரஜினி!

சென்னை: சாகித்ய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளர் ராமகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 12 Dec 2018, 7:00 pm
பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் ராமகிருஷ்ணன். இவர் பல நாவல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் பல சினிமா படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய கதைகளில் ஒன்று ரஜினி நடித்த ‘பாபா’ படத்தின் கதை. இந்தப் படத்தின் மூலம் ராமகிருஷ்ணன், ரஜினியின் நெருங்கிய நண்பரானார்.
Samayam Tamil Rajinikanth


இந்நிலையில், எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்துள்ளது. இவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த பெரிய விருதை பெற்ற தனது நண்பர் ராமகிருஷ்ணனை, ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு அழைத்து, பொன்னாடை போர்த்தி, அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ நூலை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்