ஆப்நகரம்

நெருக்கடியில் இருக்கும் ‘ஸ்பைடர்’ தயாரிப்பாளரை கைதூக்கிவிடும் ராம்சரண்!

‘ஸ்பைடர்’ பட தோல்வியால் சிக்கித் தவிக்கும் தயாரிப்பாளர் படததில் நடித்து அவரை கைதூக்கிவிட உள்ளார் நடிகர் ராம் சரண்.

TNN 4 Nov 2017, 4:10 pm
‘ஸ்பைடர்’ பட தோல்வியால் சிக்கித் தவிக்கும் தயாரிப்பாளர் படததில் நடித்து அவரை கைதூக்கிவிட உள்ளார் நடிகர் ராம் சரண்.
Samayam Tamil actor ram charan helps to spyder producer nv prasad
நெருக்கடியில் இருக்கும் ‘ஸ்பைடர்’ தயாரிப்பாளரை கைதூக்கிவிடும் ராம்சரண்!


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘ஸ்பைடர்’ இந்தப் படத்தின் மிகப்பெரிய தோல்வியால், படத்தின் தயாரிப்பளார் என்.வி.பிரசாத் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். ‘ஸ்பைடர்’ படத்தை வாங்கி வெளியிட்டவர்கள் கேட்கும் நஷ்ட ஈட்டை கொடுக்க முடியாமல் கடந்த சில நாட்களாக சிக்கி தவித்து வந்தார்.

இந்தநிலையில் ஆபத்தில் இருக்கும் தயாரிப்பாளரை கைதூக்கி விட வந்துள்ளார் நடிகர் ராம்சரண். ஏற்கனவே என்.வி.பிரசாத் தயாரிப்பில் ‘துருவா’, ‘ரச்சா’ ஆகிய படங்களில் ராம் சரண் நடித்துள்ளார். தற்போது நெருக்கடியில் இருக்கும் தயாரிப்பாளர் என்.வி.பிரசாத்திற்கு தனது புதிய படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளாராம் ராம் சரண். இதனால் பிரசாத்துக்கு நெருக்கடி கொடுத்துவந்த விநியோகஸ்தர்கள், ராம்சரண் படத்தை அவரிடம் எப்படியாவது குறைந்த ரேட்டில் வாங்கிவிடலாம் என நெருக்கடி கொடுப்பதை குறைத்து அமைதியாகியுள்ளார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்