ஆப்நகரம்

மிஹீகாவை சந்தித்து, காதலில் விழுந்தது எப்படி?: மனம் திறந்த ராணா

மிஹீகா பஜாஜை எப்படித் தெரியும், ப்ரொபோஸ் செய்தது ஏன் என்று ராணா மனம் திறந்து பேசியுள்ளார்.

Samayam Tamil 26 May 2020, 1:23 pm
தெலுங்கு நடிகர் ராணாவுக்கும், ஹைதராபாத்தில் இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் மிஹீகா பஜாஜுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ராணா ப்ரொபோஸ் செய்ய மிஹீகா உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். மிஹீகா ஓகே சொன்ன பிறகு தான் இது குறித்து ராணா சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார்.
Samayam Tamil rana daggubati


அவர் அறிவிப்பு வெளியிட்ட கையோடு ரோகா நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் சந்தித்து நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து பேசி ஒரு முடிவுக்கு வருவது. ராணாவின் ரோகா நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை பார்த்தவர்கள் நிச்சயதார்த்தம் தான் நடந்துவிட்டது என்று தவறாக நினைத்துவிட்டனர்.
இந்நிலையில் ராணா தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சுவிடம் லைவ் சாட்டில் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது,

எனக்கு மிஹீகாவை பல காலமாக தெரியும். எங்கள் இருவரின் குடும்பத்தாரும் நல்ல நண்பர்கள். ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் எங்கள் அருகே தான் அவரும் வசிக்கிறார். அவருக்கு தெலுங்கு பேசத் தெரியும். ஆனால் நன்றாக பேசத் தெரியாது.

இருவருமே ஹைதராபாத்தில் வளர்ந்ததால் பொதுவான நண்பர்கள் பலர் உண்டு. மேலும் மிஹீகா பெரும்பாலும் வேலை செய்யும் மும்பையிலும் எங்களுக்கு பொதுவான நண்பர்கள் இருக்கிறார்கள்.
நான் லாக்டவுனின்போது நிறைய யோசிக்கிறேன். அதனால் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.

நண்பர்கள், ரசிகர்கள் என்று அனைவரிடமும் இருந்து வாழ்த்து செய்திகள் வந்து கொணே்டே இருக்கிறது. திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
நான் மிஹீகாவுக்கு போன் செய்து பேசியபோது என்ன செய்யப் போகிறேன் என்பது அவருக்கே தெரியும். அதன் பிறகு நேரில் சந்தித்தபோது நான் கொஞ்சம் பேசினேன். நான் அவரை ரொம்ப சீரியஸாக காதலிக்கிறேன். அதனால் தான் அவரை சந்தித்தபோது இது தான் காதலை சொல்ல சரியான நேரம் என்று தோன்றியது. அதனால் தான் ப்ரொபோஸ் செய்தேன்.

சினிமா துறையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்வது குறித்து நான் யோசித்ததே இல்லை. மிஹீகாவை சந்தித்தேன், பிடித்துப் போனது, அவ்வளவு தான். நான் என் துணையை பார்த்துவிட்டேன் என்றார்.

முன்னதாக ராணாவின் பெயர் த்ரிஷா, ஸ்ரேயா சரண், பிபாஷா பாசு, ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்ட நடிகைகளுடன் சேர்ந்து அடிபட்டுள்ளது. அதில் ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாகத் தான் பல ஆண்டுகளாக பேசப்பட்டது. இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த யாரையும் திருமணம் செய்வது குறித்து யோசித்ததே இல்லை என்று ராணா கூறியதை பார்த்த சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராணா தான் மிஹீகாவை திருமணம் செய்யப்போவதாகக் கூறி கடந்த 12ம் தேதி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் இருந்து ராணா, மிஹீகா பஜாஜ் பற்றி தான் தெலுங்கு சினிமா ரசிகர்கள் ஃபுல்டைமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா லாக்டவுனால் வீட்டில் சும்மா இருப்பவர்களுக்கு ராணா, மிஹீகாவால் பொழுது போகிறது. ராணா, மிஹீகாவின் திருமணத்தை டிசம்பர் மாதம் நடத்த அவர்களின் வீட்டில் முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பிறகு நிச்சயதார்த்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்