ஆப்நகரம்

Devi 2: வெறும் 2 சீன் தான்- ஆர்ஜே பாலாஜி நடிக்கும் புதிய படம் குறித்து பேச்சு

த்ரில்லர், காமெடி படங்களின் வரிசையில் 2016ல் வெளிவந்த படம் ‘தேவி’. இந்த படத்தின் 2வது பாகம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது.

Samayam Tamil 28 May 2019, 2:52 pm
த்ரில்லர், காமெடி படங்களின் வரிசையில் 2016ல் வெளிவந்த படம் ‘தேவி’. இந்த படத்தின் 2வது பாகம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது.
Samayam Tamil RJ Balaji Devi 2


பிரபுதேவா, தமன்னா, ஆர்ஜே பாலாஜி நடித்து வசூல் ரீதியில் நல்ல வெற்றி பெற்ற தேவி படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இதில் நந்திதா, கோவை சரளா, டிம்பில் ஹயாதி உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.

வெறும் 2 சீன் தான்:
ஆர்ஜே பாலாஜி ஹீரோவாகவும், அவரது கதையில் உருவான ‘எல்கேஜி’ படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஸ், நாஞ்சில் சம்பத், ராம்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Yogi Babu: யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, விஜய் டிவி ராமர் நடிக்கும் பன்னிகுட்டி ஷூட்டிங் அப்டேட்!

நடிகை சாய் பல்லவி ஓரின சேர்க்கையாளரா?

கிளாமர் குறைஞ்சா அரசியலுக்கு வந்துற வேண்டியது தான்! - ஓபன் பண்ண யஷிகா ஆனந்த்

இதையடுத்து தேவி2 படத்தில் அவர் நடிப்பது குறித்து அவரிடம் பல ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதற்கு டுவிட்டரில் பதிலளித்த ஆர்ஜே பாலாஜி, “தேவி 2 படத்தில் வெறும் 2 சீன்கள் மட்டுமே வருவேன். அதிகபட்சமாக 2 சீன்களும் 5 அல்லது 6 நிமிடங்கள் வரை மட்டுமே இடம் பெறும்.” என்பதை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்