ஆப்நகரம்

மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.கே.சுரேஷ்!

விநியோகஸ்தரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.

Samayam Tamil 17 Jan 2018, 8:15 pm
விநியோகஸ்தரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.
Samayam Tamil actor rk suresh in cheating case by kodaimazhai producer
மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.கே.சுரேஷ்!


விநியோகஸ்தரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது தயாரிப்பில் கடந்தாண்டு வெளிவந்த தர்மதுரை 100 நாட்களைக் கடந்து ஓடியது. இந்த நிலையில், கோடைமழை படத்தின் தயாரிப்பாளர் அலெக்சாண்டர் ஆர்.கே.சுரேஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

யாழ் தமிழ்த் திரை சார்பாக, நண்பர்களுடன் இணைந்து கோடைமழை, படத்தை தயாரித்தேன். ஆனால், படத்தின் வியாபாரம் மற்றும் சினிமா துறை போன்றவை பற்றி தெரியாததால், வெறும் 27 படங்களில் இப்படத்தை வெளியிட முடிந்தது. இந்த நிலையில் கோடைமழை படத்தை பார்த்த ஆர்.கே.சுரேஷ், படம் நன்றாக உள்ளது. அதனால், படத்தை மறுவெளியீடு செய்யலாம் என்று கூறி அதற்கு ரூ.40 லட்சம் வரை செலவாகும். அப்படி கொடுத்தால், இந்தப் படத்தை 90 திரையரங்குகளில் வெளியிடுவதாக தெரிவித்தார்.

அவரது பேச்சைக் கேட்ட நாங்களும் அவரிடம் ரூ.25 லட்சம் கொடுத்தோம். ஆனால், அவர் சொன்னபடி படத்தை 90 திரையரங்குகளில் வெளியிடாமல், வெறும் 11 திரையரங்குகளில் வெளியிட்டார். மேலும், மீதி தொகையாக ரூ.11 லட்சம் காசோலையாக கொடுத்தார். ஆனால், அந்த காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதாக கூறி ஆர்.கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்