ஆப்நகரம்

மலையாளத்தில் களமிறங்கிய நடிகர் சம்பத்!

நடிகர் சம்பத் தற்போது மலையாள சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

TNN 14 Jul 2016, 5:50 pm
நடிகர் சம்பத் தற்போது மலையாள சினிமாவில் களமிறங்கியுள்ளார்.
Samayam Tamil actor sampath steps in malayalam
மலையாளத்தில் களமிறங்கிய நடிகர் சம்பத்!


சமுத்திரகனி டைரக்சனில் விஜயகாந்த் நடித்த ‘நெறஞ்ச மனசு’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சம்பத். தொடர்ந்து ‘சென்னை-28’, ‘சரோஜா‘, ‘கோவா’, ‘பிரியாணி’ என வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகராகி ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான இவர், தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள், நல்லவிதமான கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பை பார்த்து இப்போது மலையாளத்திலும் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருகின்றன.

இந்த வருடத்தில் மட்டும் ஜெயராம் நடித்த ‘ஆடு புலியாட்டம்‘ மற்றும் மம்முட்டி நடித்த ‘கசபா’ என இரண்டு மலையாள படங்களில் நடித்துள்ள சம்பத், இரண்டிலுமே மெயின் வில்லனாக நடித்துள்ளார். இதில் ‘ஆடுபுலியாட்டம்‘ என்கிற பேய் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மீது ஒருதலையாக காதல் கொண்டு, அவர் பைத்தியமானாலும் கூட அவர் மீது தன் நிழல் கூட படாத ஜென்டில் வில்லனாக நடித்திருந்தார்.

அதேபோல் மம்முட்டியின் ‘கசபா’ படத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறும் கேரக்டரில் வரலட்சுமிக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்பத். தொடர்ந்து மலையாளத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடிவந்தாலும், அதில் தனக்கு தோதானவற்றை மட்டும் தேர்வு செய்து நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் சம்பத்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்