ஆப்நகரம்

ரஜினியுடன் இணைந்த சசிகுமார்!

ரஜினி தற்போது நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமாரும் இணைந்து நடிக்கிறார்.

Samayam Tamil 4 Oct 2018, 4:02 pm
பிரபல இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம் மற்றும் நடிகைகள் மேகா ஆகாஷ், சிம்ரன், த்ரிஷா உட்பட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த பிரபலங்கள் பட்டியலில் இன்னொரு பிரபல நடிகரும் இணைந்துள்ளார்.
Samayam Tamil petta


இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாரும் நடிக்கிறார். இவரின் கேரக்டர் சின்னதாக இருந்தாலும் மனதில் நிற்கும் கேரக்டர் என்றும், ரஜினிக்கும் அவருக்கும் இணைந்து முக்கிய காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் வெளியாகவுள்ளதாக தெரிகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்