ஆப்நகரம்

சசிக்குமாருடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்: பூஜையுடன் ஆரம்பம்!

அறிமுக இயக்குனர் ஹேமந்த் குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளன.

Samayam Tamil 13 Jul 2021, 7:17 pm
ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நா நா உள்ளிட்ட படங்கள் சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ளன. கிட்டத்தட்ட இந்த படங்களின் அணைத்து பணிகளிலும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இந்நிலையில் சசிக்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.
Samayam Tamil Sasikumar
Sasikumar


அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் என்பவர் இயக்கவுள்ள இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கணேஷ் சந்திரா, எடிட்டராக சிவ நந்தீஸ்வரன், கலை இயக்குநராக மிலன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்

இன்று பூஜையுடன் படத்தின் பாடல் பதிவு ஆரம்பமானது. கிராமத்து பின்னணியில் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக இந்தப்படம் உருவாக உள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை சம்யுக்தாவும் இந்த படத்தில் சசிக்குமார் ஜோடியாக நடிக்க உள்ளார். பட பூஜையில் சம்யுக்தாவும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தில் எந்த கடவுளும் அவதிக்கப்படவில்லை: சர்ச்சைகளை கிளப்பிய போஸ்டர் குறித்து இயக்குனர் விளக்கம்!
பிக் பாஸ் சீசன் 4 முடிந்த கையோடு விஜய்சேதுபதி நடிப்பில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் சம்யுக்தா. நீண்ட காலமாகவே இந்தப்படம் ரிலீஸ் தேதி தள்ளிபோய் கொண்டே போகிறது. இந்நிலையில் தற்போது சசிக்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சம்யுக்தா. இந்த படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்