ஆப்நகரம்

ராக்ஸ்டார் ரமணியம்மா பாட்டுக்கு அடிமையான சசிகுமார்!

நடிகர் சசிகுமார், நான் ராக்ஸ்டார் ரமணியம்மா பாட்டுக்கு அடிமை என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Apr 2018, 6:08 pm
நடிகர் சசிகுமார், நான் ராக்ஸ்டார் ரமணியம்மா பாட்டுக்கு அடிமை என்று கூறியுள்ளார்.
Samayam Tamil sasikumar-ramani-ammal


சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி வருகிறார் ராக்ஸ்டார் ரமணியம்மா. தற்போது இவரை தமிழகம் முழுவதும் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவ்வளவு பிரபலமாகிவிட்டார். தன் குரலால் பல ரசிகர்களை கவர்ந்தவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அனைவருமே புகழ்வது ராக்ஸ்டார் ரமணியம்மாவை தான்.

இந்நிலையில் ராக்ஸ்டார் ரமணியம்மாவின் குரலுக்கு இந்த வாரம் அடிமையானது வேறு யாருமில்லை, ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இயக்குனரும், நடிகருமான சசிக்குமார் தான். இவர் ரமணியம்மாவின் பாடலை கேட்டு விட்டு கண் கலங்கிவிட்டார், அதோடு ‘‘நீங்கள் தான் எங்கள் வரலாறு’’ என உருக்கமாக பேசினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்