ஆப்நகரம்

வடிவேலுவின் ரசிகராக சதீஷின் 'நாய் சேகர்' பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

சதீஷ் நாயகனாக நடித்து வரும் படத்தின் டைட்டில் 'நாய்சேகர்' மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழு.

Samayam Tamil 17 Sep 2021, 8:55 am
தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகப் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் சதீஷ். சில மாதங்களுக்கு முன்பாக இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. சென்னையில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil நாய்சேகர்
நாய்சேகர்


கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது. இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பிட்டுப் படப்பிடிப்பை நடத்தி வந்தனர் படக்குழு.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகியுள்ள வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு 'நாய் சேகர்' என்று தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து சதீஷ் நடிக்கும் படத்திற்கும் 'நாய் சேகர்' என தலைப்பிட்டு அதனை முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து விட்டதால் இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.

சாதனை படைத்த ஜெய்யின் 'எண்ணித் துணிக' டீசர்: உற்சாகத்தில் படக்குழுவினர்!
இந்நிலையில் 'நாய் சேகர்' தலைப்புக்காக நடிகர் வடிவேலு சார்பில்ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஏ.ஜி.எஸ் நிறுவனமோ இந்த தலைப்பு தான் தங்களின் படத்திற்கு நன்றாக இருக்கும் என உறுதியாக மறுத்துள்ளனர். இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவித்ததை தொடர்ந்து, இந்த படத்திற்கு என்ன டைட்டில் வைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.


இந்நிலையில் 'நாய்சேகர்' என்ற தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதனை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். 'நாய் சேகர்' பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டில், வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சதீஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள், படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்