ஆப்நகரம்

பரூக் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் நிதியுதவி! சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள்!

திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த பரூக் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

TNN 1 Apr 2017, 8:39 pm
திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த பரூக் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் நிதியுதவி வழங்கியுள்ளார்.
Samayam Tamil actor sathyaraj financial help to farook family who murdered islamic
பரூக் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் நிதியுதவி! சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள்!


கோவை உக்கடம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பரூக். கூலித்தொழிலாளியானை இவர் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த மாதம் 16ம் தேதி இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக இவ்வழக்கில், அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர், தாங்கள்தான் கொலை செய்தோம் என்று கூறி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பரூக் இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்களை, தொடர்ந்து பரப்பி வந்ததாகவும், அதனால் ஆத்திரமுற்று அவரை கொலை செய்ததாகவும், கொலையாளிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். பெரியாரின் தொண்டராக விளங்கும் சத்யராஜின் இந்த உதவி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு சத்யராஜ்க்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Actor sathyaraj financial help to farook family who murdered islamic.

அடுத்த செய்தி

டிரெண்டிங்