ஆப்நகரம்

நடிகர்கள் தேர்தலில் தோற்பதே மக்களுக்கு நல்லது- சத்யராஜ்!!

பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் நினைப்பது தவறாக முடியும் என நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்

Samayam Tamil 17 Feb 2018, 10:23 pm
பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் நினைப்பது தவறாக முடியும் என நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor sathyaraj has said that it would be better for the actors and for people if actor failed in politics
நடிகர்கள் தேர்தலில் தோற்பதே மக்களுக்கு நல்லது- சத்யராஜ்!!


சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் சமூகநீதி பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் நடிகர் சத்யராஜும் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,”பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று யார் கருதினாலும் அது தவறாகவே முடியும். நடிகர்கள் அரசியலில் தோற்பதே அவர்களுக்கும் மக்களுக்கும் நல்லது” என்று தெரிவித்தார்.

நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில், அவர்களை நடிகர் சத்யராஜ் மறைமுகமாக விமர்சித்துள்ளது அவர்களின் ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்