ஆப்நகரம்

படைப்பாளிகள் பயப்படும் சூழ்நிலை ஏற்படும்: நடிகர் சத்யராஜ் கண்டனம்!

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவால் கடந்த காலங்களில் வெளியான முற்போக்கான படங்களை கூட முடக்கி போட முடியும் என கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

Samayam Tamil 8 Jul 2021, 12:15 pm
புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது ஒன்றிய அரசு. இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழ் நாட்டில் இருந்து நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Actor_Sathyaraj
Actor_Sathyaraj


ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவால் திரைத்துறையின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் ஆளும் அரசுக்கு ஆதரவான கருத்துக்கள் கொண்ட திரைப்படங்கள் மட்டுமே வெளியாகும் என்றும் திரைத்துறையினர் அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரையுலக சார்பில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவில் தமிழ்நாடு அரசு தலையிட என்றும் வலியுறுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திரைப்பட தணிக்கை சட்டத்திருத்த எதிர்ப்பு இணைய வழி கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் எழுத்தாளர்கள், திரைத்துறை கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விரைவில் துவங்குகிறது: லிங்குசாமி - ராம் பொத்தினேனி இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு!
அப்போது நடிகர் சத்யராஜ், ‘இந்த சட்டம் வந்தால், ஒரு கொள்கையின் அடிப்படையில், படத்தை தடை செய்ய பல காரணங்களை கண்டுபிடிக்க முடியும். இது படைப்பாளிகளின் கருத்துரிமையை பறிக்கும். படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் வித்யாசமான, முற்போக்கான படங்களை எடுக்க பயப்படும் சூழல் ஏற்படும்.

கடந்த காலங்களில் வெளியான பராசக்தி, ரத்தக்கண்ணீர் உள்ளிட்ட பகுத்தறிவு சிந்தனைகளுடன் வந்த முற்போக்கான படங்களை கூட முடக்கிபோட்டு விட முடியும். மீண்டும் இதுபோன்ற படங்கள் எப்படி வரும்? வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்ற படைப்பாளிகள் இச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால், ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்வது நாட்டிற்கு நல்லது. எனவே, ஒன்றிய அரசு ஆவண செய்ய வேண்டும்’என்று கூறினார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்